கோவை பி.கே.புதூரில் உள்ள தனியார் குடோனில் கடந்த 5 நாட்களாக பதுங்கியிருந்த சிறுத்தை நேற்றிரவு வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய நிலையில், அந்த சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
கடந்த 17ஆம் தேதி குடோனுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். குடோனுக்கு முன்புறமும் பின்புறமும் வனத்துறை வைத்த கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்த சிறுத்தை, நேற்றிரவு கூண்டில் சிக்கியது.
இன்று காலை சிறுத்தையின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்த வனத்துறையினர், உடல்நிலை சீராக இருந்ததால் அதனை டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.