மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய எதையும் திமுகவும், தமிழகமும் ஏற்றுக்கொள்ளாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, இந்திய ஆட்சி பணியில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு திமுகவின் எதிர்ப்பு தொடரும் என்றார்.