செங்கல்பட்டு மாவட்டத்தில் 59 இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என்றும், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
திருக்கழுக்குன்றம் அருகே இடையாத்தூர் கிராமத்தில், புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், படாலம், மதுரா புதூர், சூனாம்பேடு, காரியம்தாங்கள், ஆகிய இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.