திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகள், மின் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நாகலட்சுமி என்னும் 16 வயது சிறுமியும், மணிமேகலை என்னும் 3 வயது சிறுமியும், பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.