சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா பரவல் மேலும் குறைவது, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில் தான் உள்ளது என குறிப்பிட்ட அவர், சளி, இருமல், தொண்டை வலி இருந்தால், உடனடியாக 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சென்னையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து வெளியிட, மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.