விழுப்புரம் காமராஜர் சாலையில், வளைவில் திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரி, அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, வளைவில் திரும்ப முயற்சி செய்த போது சாலை முனையில் இருந்த சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை மீது லாரியின் பின் பக்கம் மோதியது.
இதில் சிலை அப்படியே கீழே சாய்ந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, புனேவை சேர்ந்த மச்சிந்திர சபளி என்ற அந்த ஓட்டுனரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பெரியார் சிலை சேதமான இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.