தர்மபுரியில் துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நான்கு மாடி துணிக்கடையொன்று விடுமுறையளிக்கப்பட்டு மூடியிருந்துள்ளது. இந்நிலையில் கடையிலிருந்து புகை வருவதாக பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சுவற்றில் துளையிட்டு தீயை அணைத்தனர். கடையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்ட நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.