புதுச்சேரி முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அம்மாநில வரலாறும் தமிழ் நாட்டின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த லியோனி, வ.உ.சி உள்பட நாட்டிற்காக உழைத்த பல்வேறு தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.