கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு 12 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 7ஆம் தேதி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படகு போக்குவரத்தை சார்ந்து இருக்கும் உள்ளூர் வியாபாரிகள் அதனை மீண்டும் தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும், முக கவசம் அணிந்து இருக்க வேண்டும, 50 சதவீத பயணிகள் மட்டுமே படகில் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் படகு போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.