புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவுக்கு ஏற்ப கூடுதலாக 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
செவ்வாய்கிழமையன்று மாவட்டத்தில் 69 இடங்களில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், பாலையூர் கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார்.
நிகழ்வின் போது பேசிய அவர், வியாபாரிகளிடம் இருந்து நெல் வாங்குவதைத் தவிர்த்து, விவசாயிகளிடமிருந்து மட்டும் நெல்லை கொள்முதல் செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.