மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது இணைய பக்கத்தில், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 34 சதவீதமாக இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலை நகரமாக விளங்கும் தமிழகத்திற்கு முதலீடு செய்ய வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு ஏற்கனவே தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.