இரு வேறு நாட்களில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுகளில் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், 10ஆம் தேதி நடைபெற்ற வேதியியல் பாடத் தேர்விலும், 12ஆம் தேதி நடைபெற்ற இ.சி.இ. பாடத்தேர்விலும் ஒரே மாதிரியான 10 பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த 10 வினாக்களும் வரிசை மாறாமல் அப்படியே இருதேர்வுகளிலும் இடம்பெற்றதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட விடைக்குறிப்பின் மூலம் இது கண்டறியப்பட்டதாக தெரிவித்த தேர்வர்கள், இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகாரளித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அத்தேர்வு கடந்த டிசம்பரில் நடைபெற்றது.