தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 5 செண்டி மீட்டர் மழையும், நாகை திருப்பூண்டியில் 4 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.