செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Jan 18, 2022 09:01:03 AM

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 6 பேர் நீர்ச்சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் 3 வேன்களில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சாமிகும்பிடச் சென்றுள்ளனர். 

வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் தாராபுரம் அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் உற்சாகமடைந்து, இளைஞர்கள் 10 பேர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆர்வ மிகுதியில் சற்று ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்களில் 6 பேர் நீர்ச் சுழலில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். உடன் சென்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்று அது தோல்வியில் முடிந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி, 6 பேரின் சடலங்களையும் மீட்டனர். அவர்களைக் காப்பாற்ற முயன்று கை எலும்பை முறித்துக் கொண்ட நபரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன்கள் ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும் திருப்பதி என்பவரது மகன்களான யுவன், மோகன் ஆகியோரும் அடங்குவர். அத்தனை பேருமே 19 வயதைத் தாண்டாதவர்கள்.

தாராபுரம் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 20 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் ஆழம் அதிகமாகவும் கீழே மணல் இல்லாமல் சேறு சகதியுடன் புதைகுழியுமாகவும் உள்ளது. இதுகுறித்து அறியாத வெளியூர் நபர்கள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று கரைக்கு திரும்பவர முடியாமல் நீரில் முழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆழமான பகுதிக்குச் செல்பவர்கள் நீந்தமுடியாமல் நீரில் முழ்கும்போது சேறும் சகதியுமான புதைகுழியில் சிக்கிவிடுவதால், மீட்கச் செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கும் அச்சுறுத்தலாகிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

இதே பகுதியில் மட்டும் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் குளிக்க சென்று இறந்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அங்கு எச்சரிக்கைப் பலகை வைப்பதோடு அதை மீறி சென்றுவிடாதவாறு தடையை ஏற்படுத்தவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..


Advertisement