வேலூர் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் சீறிப் பாய்ந்து சென்ற காளை ஒன்று, முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கீழ் அரசம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன.
காளைகள் சீறிப் பாய்ந்து ஓடுவதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்துக்குள் புகுந்து ஓடிய காளை ஒன்று, பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்றிருந்த ஆரணியைச் சேர்ந்த நாமதேவன் என்ற முதியவரை முட்டித் தூக்கி வீசியது.
காளை முட்டித் தூக்கி வீசியதில் படுகாயமடைந்த முதியவர் நாமதேவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.