குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றினை போற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். இந்தாண்டு அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும், தமிழகம், மேற்கு வங்கம், கேரளாவின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், மத்திய அரசு நிர்ணயித்த அளவீடுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்தாண்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்கும் என்றும் குறிப்பிட்டனர்.