இன்றும் நாளையும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நாளை தமிழக வட கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 19 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் குன்னூர், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.