முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜயநல்லதம்பி என்பவரை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் மீது, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தார்.
இந்நிலையில், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தனது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதற்காக, வெம்பக்கோட்டை அதிமுக பிரமுகரான விஜயநல்லதம்பியிடம், 30 லட்சம் ரூபாய் கொடுத்தாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.