முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 105ஆவது பிறந்த நாளையொட்டி நாளை சென்னை கிண்டியில் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்ததைக் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம், மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கியது, பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர் என்றும் குறிப்பிட்டுள்ளது.