பொங்கல் பண்டிகை நாளில் திரையரங்குகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வலிமை, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் கொரோனா விதிமுறைகள் காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய நிலையில், 10க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தன.
ஆனால், சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் மக்கள் கூட்டமில்லாததால் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.