பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட விபரங்களை பதிவிடுமாறு கூறி, செல்போனுக்கு லிங்க் அனுப்பி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள் அரங்கேறுவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூஸ்டர் டோஸ் போட விருப்பம் தெரிவிப்பவர்களின் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பும் மோசடி கும்பல், அதில் விபரங்களை பதிவிடுமாறு கூறி செல்போன் எண்ணுக்கு வரும் OTPஐ கேட்டுப் பெறுவதாகவும், பின்னர், அதனை வைத்து செல்போனை கட்டுக்குள் கொண்டு வந்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவதாகவும் போலீசார் எச்சரித்திருக்கின்றனர்.
இதுபோன்று வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பாதீர்கள் எனவும், மர்ம நபர்கள் அனுப்பும் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்