சென்னை மதுராவாயிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை கண்முன்னே 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆவடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது 4 மற்றும் 2 வயதான இரண்டு மகன்களை இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் அமரவைத்துக் கொண்டு மகாலிங்கபுரத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். மதுரவாயல் அருகே முன்னால் இரும்புக்குழாய்கள் மற்றும் தகர ஷீட்டுகளை ஏற்றிச் சென்ற 3 சக்கர மிதிவண்டியின் மீது மோதி இருக்கிறார்.
நிலை தடுமாறி கீழே விழுந்த குழந்தைகள் இருவர் மீதும் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தந்தை கண் முன்னே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செல்வம் அதிவேகமாக பைக்கில் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.