பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பிய நிலையில், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.
பஞ்சாப் பயணத்தில் பிரதமரின் பாதுகாப்பு குறித்த சாய்னாவின் கருத்தை விமர்சித்து சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. சித்தார்த்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் தன் அநாகரீகமான நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருவதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்று கூறியுள்ள சித்தார்த், என்றென்றும் சாய்னாதான் தனது சாம்பியன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
class="twitter-tweet">Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022