புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்களை வழிமறித்து தாக்கிய இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
கொத்தமங்கலம் பகுதியில் இருந்து ஆலங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இரு முதியவர்களை, ஆலங்காடு பகுதியில் மதுபோதையில் வழிமறித்த இரு இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதியவரை தாக்கிய வெங்கடேஷ் என்பவனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மணி என்பவனை தேடி வருகின்றனர்.