திருவண்ணாமலையில், திருடும் போது சிக்காமல் இருக்க, உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு அரை குறை ஆடையுடன் திருடச் சென்ற நபர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் ஒத்தவாடை தெருவில் அந்த நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்ததைப் பார்த்த சிலர் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு அவனை கை, கால்களை கட்டிபோட்டு உதைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் வேலூரைச் சேர்ந்த முனுசாமி என்பதும் அவன் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.