கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரிகள், மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை நேரங்களில் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடும் நிலையில், அவை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றித் திரிகின்றன.இதனால், சில நேரங்களில் விபத்துகள் நேரிடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பசு மற்றும் காளை மாடுகளை கயிறு கட்டிப் பிடித்த அதிகாரிகள் அவற்றை காமராஜ் காலனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டிவைத்தனர்.
பின்னர், மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.