முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில், முன்களப் பணியாளர் என்ற முறையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அனைத்து முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் கொண்ட 60வயதிற்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் தடுப்பூசி எனும் கவசத்தை கொண்டு நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்துள்ளார்.