தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு தனியார் குடோனில் தடை செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குடோனை சோதனை செய்தனர். அப்போது அங்கு தனியாக மறைவிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் 20 டன் செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டு தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது சோதனையில் தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் குடோன் மற்றும் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.