பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் டுவிட்டர் பதிவுக்கு, சர்ச்சைக்குரிய வகையில் பதில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்திருந்த சாய்னா நேவால், இது கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்திருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், சர்ச்சையாகயும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பதில் கருத்து கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக சிர்த்தார்த் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க, மகாராஷ்டிரா டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அத்தோடு, உடனடியாக சித்தார்த்தின் டுவிட்டர் கணக்கை முடக்கவும், வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, அவமதிக்கும் உள்நோக்கத்துடன் கருத்துக் கூறவில்லை என நடிகர் சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.