தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்கி வைத்த பின் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முதலமைச்சர் அனுமதித்துள்ளதாகவும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி போட்டியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகக்கூடும் எனவும் கூறினார்.