தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 10ந்தேதி முதல் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தேரோட்டம் ரத்து என்றும், அபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மார்கழி மாத பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.