கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த நடவடிக்கை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறைப்படுத்தபடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை அறிவிக்கப்பட்ட வகுப்புகளுக்கு இணையவழிக் கல்வி மூலம் பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.