தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 218 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் மதுப்பிரியர்கள் நேற்றே அங்கு சென்று குவிந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை மண்டலத்திற்குட்பட்ட மதுபானக்கடைகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 42 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கும்,
சேலம் மண்டலத்தில் 40 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.