தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்களை இடம்பெறச்செய்யும் வகையிலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடத்திட்டத்தை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடத்திட்டத்தை மாற்றிய பின் தமிழ், இலக்கியம், கணிதம், புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்க பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.