தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 10 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதிகபட்சமாக சென்னையில் மேலும் 5 ஆயிரத்து 98 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 332 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 10 பேர் உயிரிழந்த நிலையில், 40 ஆயிரத்து 260 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதை மொத்த பாதிப்பு 185-ஆக உயர்ந்துள்ளது.