ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை 1,000 ரூபாயாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆற்றுப்படுகையில் மணலை எடுத்து பொதுமக்களுக்கு இணையதளத்தில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு புதிய வழிமுறைகளை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் விலை நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும், மணல் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மணல் குவாரிகள் கண்காணிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.