கூட்டுறவு இயக்குநர் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போலி ஆவணங்கள், போலி நகைகளை வைத்து முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரே நபர் 600-க்கும் மேற்பட்ட நகைக்கடன்களை பெற்று உள்ளதாகவும், இது போன்று நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.