நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோருவது தொடர்பாகச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நாளைக் காலை பத்தரை மணிக்கு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரிச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட முன்வரைவு மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காத நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதற்காக, சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெற உள்ளது.