கர்நாடக மாநிலம் மாண்டியா அருகேயுள்ள கனங்கூர் கிராமத்தில், பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாகக் கூறி மாணவியின் உடைகளை களைய சொல்லி துன்புறுத்திய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அந்த மாணவி பள்ளியில் செல்போனுடன் இருந்ததைக் கண்ட தலைமையாசிரியர் சினேகலதா, மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை என்ற பேரில், ஆடையை களையுமாறு கட்டாயப்படுத்தி மோசமாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததையடுத்து, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியையின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.