சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51 ஆயிரத்து 17 விவசாயிகளுக்கு 501 கோடியே 69 இலட்ச ரூபாய் அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கியதில் விதிமீறல்கள் உள்ளதைக் காரணம் காட்டி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51 ஆயிரத்து 17 விவசாயிகளுக்குத் தள்ளுபடிச் சான்று வழங்காமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்களுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நடப்பாண்டில் மீண்டும் வழக்கம்போலப் பயிர்க்கடன் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.