தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுகள் ஒரு சேர சுனாமி போல் பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை எம்.ஐ. டி. கல்லூரியில் கொரோனா பாதித்த மாணவர்கள் அங்குள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து பேட்டியளித்த மா.சுப்ரமணியன், இனி வரக்கூடிய நாட்களில் கொரோனா பாதித்தோரில் 80% பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், முடியாதபட்சத்தில் அரசின் மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.