ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக, அன்றைய தினம் சொந்த ஊர் செல்ல அறிவிக்கப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமையான 9-ந் தேதியன்று பயணம் செய்ய 1208 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், அந்த தொகை முழுமையாக பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, பொங்கல் பண்டிகைக்கு பிறகான ஞாயிற்றுக்கிழமை அதாவது 16ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்புள்ளதால் அன்றைய தினத்திற்கான முன்பதிவும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில் 16 ஆம் தேதி தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.