அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது பழிவாங்கும் நோக்கத்திற்காக அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, அம்மா கிளினிக் எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக முதலமைச்சர் பதிலளித்தார்.
மேலும், அவசர கோலத்தில், முறையான கட்டமைப்பு வசதி இல்லாமல் அம்மா மினி கிளினிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிராமப்பகுதிகளில் சுகாதார மையங்கள் சிறப்பாக செயல்படுவதால் அம்மா மினி கிளினிக்குகள் தேவையில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.