நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க எந்தத் தடையும் விதிக்கவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகளும், பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களுக்குக் கூடுதல் வார்டுகள் வருவதாகக் கூறியும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கத் தடையில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.