கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் கிராமத்தில் தெருவில் விளையாடிய குழந்தைகள் கீழே கிடந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் மருந்தை எடுத்து சாப்பிட்டதையடுத்து அவர்களுக்கு நாக்கில் அரிப்பு ஏற்பட்டதால் விஷமருந்தை சாப்பிட்டுவிட்டதாக நினைத்து பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1 முதல் 7 வயதுடைய அந்த குழந்தைகள், ரஸ்னா பவுடர் என நினைத்து மாடுகளுக்கு உடலில் ஏற்படும் புண்களை கழுவதற்கு பயன்படும் வேதி மருந்தான பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை சுவைத்துப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தைகளை சிகிச்சை அளித்து வரும் நிலையில், மருத்துவர்கள் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மருந்தால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.