அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அம்மா மினி கிளினிக் மூடப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது எனவும், அம்மா மினி கிளினிக் மூடப்படுவதின் மூலம் ஏழை, எளிய மக்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.