கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழகம் முழுவதுமுள்ள 2ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கும் போது, ஓராண்டு காலத்திற்கு மட்டும் என தற்காலிகமாகவே எனக் குறிப்பிட்டு, அரசாணை வெளியிடப்பட்டதாக கூறினார்.
மேலும், அம்மா மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட 1,820 மருத்துவ பணியாளர்கள் மார்ச் 31-ந் தேதி வரை கொரோனா தடுப்பு பணிகளிலும், பின்னர் வேறு மருத்துவ சேவைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.