திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சட்டவிரோதமாக வேனில் கடத்திச் சென்ற 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆற்காடு குப்பத்தில் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த வேன் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது.
இதனை அடுத்து அந்த வேனை போலீசார் துரத்திச் சென்ற போது வேனில் வந்தவர்கள் சாலையோர பள்ளத்தில் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.பின்னர் போலீசார் வேனை சோதனை இட்டதில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.