நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி ஒவ்வொரு கட்டமும் வீடியோ பதிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இதன் விசாரணையின்போது, மனு தொடர்பாக விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. இதனை அடுத்து, நியாயமான தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளதால், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.