கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை துரத்திச் சென்ற நபரை கிராமமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நெய்வனை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் அவரை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் சத்தமிட அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அந்நபரை மடக்கிப் பிடித்து தாக்கினர்.
உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.